Posted by : வீடு சுரேஸ்குமார் Wednesday, February 8, 2012


மின்சார தட்டுபாட்டுக்கு காரணம் நீங்கள்தான்!



என்ன நண்பர்களே இது உங்களை கோபம் கொள்ள வைக்கின்றதா அமைதியாக சிந்தித்து பார்த்தால் நாம்தான் மின்சாரத்தை தின்று தீர்க்கின்றோம் எப்படியென்பதை இந்த கட்டுரை மூலம் விளக்குகின்றோம்,பல லட்சத்தில் வீடு கட்டுகிறோம் ஆனால் முறையாக மின் இணைப்புகளை தருகிறோமா என்றால் இல்லையென்றே வருத்ததுடன் நாம் கூற வேண்டியுள்ளது, வெளிநாடுகளில் வீட்டுக்கு மின்சார இணைப்பு பிளான்(வரைபடம்) தயாரிப்பதைப் போல் இந்தியாவில் ஒரு சிலர் தவிர யாரும் வரைபடம் தயாரிப்பது இல்லை,மின்சார கேபிள்களை தரமானதாக பயன்படுத்துவதில்லை, மலிவான விலையில்தான் பெரும்பான்மையினர் பயன்படுத்துகின்றனர், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் செல்லும்போது அனைத்து மின் இணைப்பையும், யுபிஎஸ், குளிர்சாதன பெட்டி தவிர அனைத்தும் துண்டிக்கபடும் வகையில் வெளியே ஒரு பொத்தான் வைக்க வேண்டும் அதனால் மின்சாரம் மிச்சப்படுவதுடன், மின்கசிவினால் ஏற்படும் தீவிபத்தை தவிர்க்கலாம், இனி எப்படி மின்சாரத்தை சிக்கனம் செய்வது என 
பார்க்கலாம்.


நாம் பயன்படுத்தும் விளக்குகள்

விளக்குகளில் குண்டுபல்புகள் மின்சாரத்தை பெரும்வாரியாக தின்றுவிடும் அரக்கன், அதுமட்டுமில்லாமல் பூமியை வெப்பமயமாக்குதலில் பெரும்பங்கு வகிக்கின்றது. கேரளாவில் மின்சாரவாரியம் சார்பில் குண்டுபல்புகளை பெற்றுக் கொண்டு சிஎப்எல் பல்புகளை தருகிறார்கள், தமிழகத்திலும் இம்முறையைப் பயன்படுத்தலாம், குழல் விளக்குகளில் இன்னும் மலிவு விலையில் கிடைக்கும் நாற்பது வாட்ஸ் பல்புகளையே பயன் படுத்து கின்றோம், அதை விட சற்று விலையதிகமான 18வாட்ஸில் மெல்லிய குழல் விளக்குகள் கடைகளில் கிடைக்கின்றன,இவை அதிக பிரகாசத்துடன் எரிகின்றன இதன் விலை நாற்பது ரூபாய்க்குள் அடங்கும், சாதாரண சோக் பயன்படுத்துவதை தவிருங்கள் எலக்ட்ராணிக் சோக் பயன்படுத்துங்கள் இவை மின்சாரத்தை அதிகமாக செலவு செய்வதில்லை, இதை யாரும் அதிகளவில் பயன்படுத்துவதில்லை.இதை பயன் படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.


நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள்

மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறிகள் வாங்கும் போது அதன் விலையை மட்டும், அல்லது பிரபலமான நிறுவனம் இரண்டை மட்டும் பார்க்கிறோம், ஆனால் முக்கியமாக பார்க்க வேண்டியது அது எத்தனை வாட்ஸ் என பார்ப்பதில்லை, ISI முத்திரை மட்டுமின்றி, அதன் வாட்ஸ் கண்டிப்பாக கணக்கிட வேண்டும், விலை குறைவான மலிவு விலை மின் சாதனங்கள் மின்சாரத்தினை தேவையில்லாமல் தின்று விடும், மின்சார கசிவினை ஏற்படுத்தி விபத்தினை உண்டு பண்ணும்.

600வாட்ஸ் மிக்ஸியில் அரைக்கும் அதே பொருளை வெறும் 325வாட்ஸ் மிக்ஸி அரைத்துவிடும்,பிறகு எதற்கு 600வாட்ஸ் மிக்ஸி,உங்கள் தேவை அறிந்து அதற்கு தகுந்தது போல் பொருட்களை வாங்க வேண்டும், குறைவான வாட்ஸ் கொண்ட பொருட்கள் சற்று விலையதிகம்தான் என்றாலும் வருட கணக்கு பார்க்கும் போது மிக அதிகமான பணம் சேமிப்பு அடைகிறது மட்டுமில்லாமல், பொருட்கள் எளிதில் செயல் இழப்பதில்லை, அதற்கு நீண்ட கால வாரண்டியும் வழங்குகிறது ஏனைய நிறுவனங்கள்.

மற்றும் கார்டனில் மற்றும் வீட்டு முகப்பில் வைக்கப்படும் அழகு விளக்குகள் பியூஸ் போகும் போது மாற்றுவதில்லை சிலர்,இதன் காரணமாக மழை பொழியும் போது ஈரபதம் காரணமாக பியூஸ் போன பல்பு மூலம் ஏராளமான மின்சாரம் விரையமாகிறது,முக்கியமாக ஒவ்வோரு வீட்டுக்கும் எர்த் தரவேண்டும் இது பாடி எர்த் மூலம் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது, நம் மின்சாதனங்கள் கெட்டுபோகாமல் இருக்கவும் உதவுகின்றது.


உதாரணத்திக்கு ஒரு குண்டுபல்பு விலை பதினைந்து ரூபாய், அது செலவு செய்யும் மின்சாரம் இரு மாதத்திக்கு குறைந்த பட்சம் 60 யூனிட்கள், 60X1.00=60.00 வருடத்திக்கு 60X6=360 ஆக வருடத்திக்கு 360 ரூபாய் செலவு, பல்பு வருடத்திக்கு எப்படியும் மூன்று வாங்க வேண்டும், அது 45 ரூபாய், மொத்தம் 415 ரூபாய், ஆனால் 12 வாட்ஸ் சிஎப்எல் பல்ப் உயர்தரத்தில் வாங்கினால் 180 ரூபாய்,  ஒரு வருடம் வாரண்டி, ஒரு வருடத்திக்கு மின்சார செலவு வெறும் 60யூனிட்கள் 180 + 60 = 240 பார்த்தீர்களா தோழர்களே! 240 ரூபாய் மட்டுமே, சீரற்ற மின்சாரம், இடி,மின்னல் போன்ற இயற்கை பாதிப்பு தவிர இந்த பல்புகள் எளிதில் செயல் இழக்காமல் மூன்று வருடம் வரை உழைக்கின்றது, சிந்தித்து பாருங்கள்.

அடுத்தது கம்பி ஹீட்டர் பயன்படுத்துவது மிக அதிகமான மின்சாரத்தை செலவு செய்யும், அதற்கு பதிலாக இன்டெக்சன் அடுப்பு பயன்படுத்துவது சிறந்தது, வசதியுள்ளவர்கள் சோலார் ஹீட்டர் பயன்படுத்துவது நல்லது. வாசிங்மிசின், குளிர்சாதன பொருட்களை வாங்கும் போது ஐந்து நட்சத்திர குறியிட்ட பொருட்களை வாங்குவது நல்லது, இவை மிகக்குறைவான மின்சாரத்தை செலவு செய்கின்றது, கணினி,தொலைகாட்சிகளில் LED,LCD,பயன்படுத்துவது மிகச்சிறந்தது இன்னும் CRD மானிடர்களை பயன்படுத்தும் போது அதிக மின்சாரம் செலவளிக்கப்படுகிறது.

கணினி பயன்பாட்டில் 

கணினிக்கு தேவையான சிறிய 600 வாட்ஸ் UPS பயன்படுத்தும் போது, ஒரு வருடம் வரைதான் அதன் மின்கலன்கள் சிறப்பாக செயல்படும், அதன் பிறகு மெல்ல மெல்ல செயல் இழக்கத் தொடங்கிவிடும், அப்போதைய கட்டங்களில் மின்கலனை மாற்றி விடவேண்டும், வெறும் 750 ரூபாய் செலவு செய்தால் போதும், இல்லையென்றால் உங்கள் கணினி ஹார்ட்டிஸ்க்குக்கு முறையற்ற மின்சாரம் செல்லும், SMPSன் செய்ல்திறன் குறைந்து மதர்போர்டு வரை பாதிக்கப்படும்.

பிறகு UPS வாங்கும் போது நல்ல நிறுவனங்களை பார்த்து வாங்க வேண்டும், மலிவான லோக்கல் UPS வாங்கும் போது அவை தேவையில்லாத நேரத்திலும் மின்சாரத்தை மின்கலனுக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும், இதனால் மின்சாரம் செலவளிக்கப்படும், விலை கூடுதலானாலும் நல்ல நிறுவனங்களின் பொருட்களை வாங்கவேண்டும்,அதில் தானியங்கி மின்சாரம் சேமிக்கும் முறையிருக்கின்றதா என பார்த்து வாங்க வேண்டும்,தேவையில்லாத நேரங்களில் மின்சாரம் செலவளிப்பதை தடுக்கும், பணமும் மிச்சமாகும். என்ன தோழர்களே இது போன்ற பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்பீர். 

டிஸ்கி : நீ சொல்லுவது எல்லாம் சரிய்யா இதுக்கு முறையான மின்சாரம் வேண்டுமே? என்று கேட்கிறீர்கள் அதற்கு நான் என்ன செய்யமுடியும். ஆட்சியாளர் கைகளில்தான் உள்ளது.

28 Responses so far.

  1. இன்றைய காலகட்டத்துக்கு தேவையான பதிவு...

    ஆட்சியாளர்கள் சரியாக திட்டமிட்டால் மின் பிரச்சனையை நிரந்தரமாக நீக்கி விடலாம் ஆனால்..
    நினைப்பார்களா...?

  2. மாப்ள தகவல்கள் அருமை...மின்சார தட்டுப்பாட்டை சரி செய்ய கடல் நடுவே காற்றாலை அமைத்து மின்சாரம் எடுக்கும் விஷயத்தை அண்டை நாடுகள் செய்து வருகின்றன..இதை இன்னும் நம் நாட்டவர் கவனிததார்களா தெரியவில்லை...விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

  3. அப்பு... அருமையான சிக்கன கட்டுரை....

    ஆனா மின்சாரம் தான் இருக்க மாட்டிங்குதே....

  4. அனைவரும் உணரவேண்டிய கருத்துகள் ..

  5. சிறப்பான கட்டுரை அண்ணா... தெளிவான திட்டமிடலுடன் எளிதாக தீர்க்க வேண்டிய பிரச்சனை இப்படி அரசுகளின் அலட்சியப் போக்கால் மக்கள் போராட்டத்திற்கு எதிரான கோபமாக மாற்றப்படுகிறது.அந்த ஆபத்தை களைந்தெறியும் விழிப்புனர்வு அவசியம்...

  6. நல்லா சொன்னீங்க.. எல்லோரும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். கடைசியில் உங்கள் பஞ்ச் சூப்பர். அண்ணே! போட்டோ'ல அருவாவ எடுத்திருங்க. பயமா இருக்கு அண்ணே!!

  7. வணக்கம்! நல்ல யோசனை. பதிவுக்கு நன்றி!

  8. அவர்களுக்கு ஒருவரை ஒருவர் திட்டுவதற்கே நேரம் இல்லை எங்க நம்ம பிரச்சனையை கவனிக்கபோறாங்க...

  9. இப்பொழுதுதான் காற்றாலைக்கே வந்திருக்காங்க..மாம்ஸ் இன்னும் 50 வருசத்தில பண்ணிருவாங்க...

  10. கண்டிப்பாக...இல்லையென்றால் மாபெரும் விபத்தை நாடு சந்திக்கும்..அது வேலையிழப்பு

  11. ஹஹ..பயப்படாதிங்க அது நம்ம மக்கா நாஞ்சில்மனோ..

  12. வருகைக்கு நன்றி!

  13. சிக்கன கட்டுரைக்கு காரணம் மின்சாரம் இல்லை மக்கா!

  14. கண்டிப்பாக உணர வேண்டும்ங்க...

  15. வணக்கம் சுரேஷ்!
    அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க. இங்கும் குண்டு பல்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அத்தோடு ஐரோப்பாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக மின்சார சேமிப்பை வலியுறுத்துகிறார்கள்..
    தகவலுக்கு நன்றி...!!

  16. வணக்கம் நண்பரே..

    நலமா ?

    இன்னைக்கு இருக்கிற 8 மணி நேர பவர்கட்டிற்க்கு நாமும் ஓர் காரணம் தானோ ?

    நட்புடன்
    சம்பத்குமார்

  17. நல்ல விழிப்புணர்வு பகிர்வு.

  18. வணக்கம் அப்பச்சி ஆம் குண்டு பல்புகள் பூமியை வெப்பமாக்குவதால் பனிமலைகள் உருகும் அபாயம் உள்ளது வருகைக்கும் கருத்திட்டமைக்கு நன்றி!

  19. சம்பத் வாங்க..வாங்க...ஆம் நாமும் ஒரு காரணம்தான்...

  20. நன்றி ஆபிசர் சார்....

  21. உங்க பாணியில சொல்லிடீங்க...நான் என்னமோ உபயோக படுத்துறது இதுதான் http://kovaineram.blogspot.in/2011/12/blog-post_14.html

  22. சூப்பர் தம்பி.....!!!!

  23. அரசு என்னதான் முயன்றாலும் மின் தட்டுப் பாட்டை உடனே நீக்கிட
    இயலாது மந்திரத்திலே மாங்காய் விழுவதில்லை. நீண்ட கால திட்டம் தேவை
    அரசு ஆவன செய்யவேண்டும் உங்கள் பதிவில் கூறியுள்ளவாறு மக்களும்
    ஒத்துழைக்க வேண்டும். செய்வார்களா...?
    தேவையான நேரத்தில் தேவையான பதிவு! அருமை!

    புலவர் சா இராமாநுசம்

  24. எலேய் சீவலப்பேரி அருவாளை கிளப்பி விட்டுட்டியே......

  25. சுரேஷ்: தவறாக நினைக்காதீர்கள். ஒரு நாள் அனைவரும் பதிவு வெளியிட வேண்டாம் என்ற ஐடியா தந்ததே நீங்கள் தான். ஆனால் ஏழாம் தேதி அனைவரும் பதிவு வெளியிடாத போது நீங்கள் வெளியிட்டுல்லீர்களே? தேதியில் ஏதும் குழப்பமா?

  26. நீங்க தவறா நினைக்க வேண்டாம் மோகன்குமார் சார் நம்ம பிளாக்ல என்ன பிரச்சனையென்றே தெரியவில்லை இது சத்தியமாக 9ம் தேதி காலையில போட்ட பதிவு 7ம் தேதி காட்டுகிறது 9ம் தேதி மாலை போட்ட பதிவு சரியாக காட்டுகிறது....

  27. மின்சாரத்தை சேமிக்க சிறந்த தகவல்கள் ...

    நன்றி-ன்னே

  28. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

Popular Post

Blogger templates

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

Ads 468x60px

About Me

My Photo
I am Artist, Pencil Carver,Adope Illustrator,Adobe Photo Shop,CorelDraw Expert,Video Editing,GIF Animation Creater,Textile Designer 20year Experince 
and
kavithai,kathai Righting Blogger

உறவுகாரங்க...

Welcome to artveedu.com

இந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்

பதிவுகள் அலமாரி!

நோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...

Enter your email address:

Delivered by FeedBurner

Featured Posts

"நாளை...

- Copyright © வீடு -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -